வெங்கட் மூவிஸ் புரொடக்ஷன் வழங்கும் "தண்டுபாளையம்' படத்தை கே.டி. நாயக் இயக்கியுள்ளார். இப்படத் தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் வெங்கட் பேசியது ""எத்தனையோ க்ரைம் படம் பார்த் திருப்பீங்க. நிச்சயமாக நான் ஒரு சேலஞ் சாக சொல்கிறேன். இதுபோல் ஒரு படத்தை க்ரைம் படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு டிபரெண்டான எக்ஸ்பீரி யன்ஸ் இந்தப்படத்தில் இருக்கும்.''

Advertisment

ee

பாடலாசிரியர் சொற்கோ ""ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி இது. இந்தப் புவனமே திரும்பி பார்க் கும் வகையில் உள்ளவர் எங்கள் பி.ஆர்.ஓ. புவன். இந்தப்படத்தின் கதாநாயகி மிக கம்பீரமான தோற்றத் தோடு இருக் கிறார். மிகச் சிறப்பாக நடித் திருக்கிறார். படமெங்கும் ரத்தக்கறையாக இருந்தாலும் இந்தப்படம் ஒரு செய்தியைச் சொல்கிறது.''

நடிகர் அபி சரவணன் ""ஹீரோயின் சுமன் ரங்கநாத் மேடம் பற்றி இப்பதான் ஒரு விஷயம் கேள்விப் பட்டேன். அவங்க தான் "மாநகர காவல்' படத்தில் நடித்துள்ளா ராம். பக்கத்து மாநி லத்து நடிகை யான அவர் எவ்வளவு அழகாக சேலை கட்டி வந்திருக்கிறார். ஆனால் நம்மூர் நடிகைக்கு ஏன் இந்த எண்ணம் வரமாட் டேங்குதுன்னு தெரியல.'' ஹீரோயின் சுமன் ரங்கநாத் ""என்னோட முதல்படம் "புதுப்பாட்டு.' சென்னை எனக்கு ரொம்ப பிடிக் கும். இங்குள்ள சாப்பாடு, இங்குள்ள கலாச்சாரம் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்தில் நடிக்க கேட்டதும் உடனே சம்மதித்தேன். ஏன்னா இந்தக் கேரக்டர் ரொம்ப சேலன்ஞ்சிங்காக இருந்தது. எனக்கு வித்தியாசமான ரோல்களில் நடிக்கவேண்டும் என்பது தான் ஆசை. எனக்கு ஒரு விஷன் இருக்கு. எனக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் வெங்கட் சாருக்கு நன்றி. என் கேரக்டர்களை நான் காதலிப்பேன். இந்தப்படம் எனக்கு மிகச்சிறப்பான அனுபவம்.'